2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்? ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள்' என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை இரவு போடப்பட்டுள்ளன.

சிவசேனா, (பிற மதத்தவரின் கருத்தில் சாத்தானின் பிள்ளைகள்) என உரிமைகோரப்பட்டுள்ள இத் துண்டு பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை. இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை. இந்துக்கள் பிற மத கடவுள்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை. உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக இல்லாதற்கு காரணம் நாம் படையெடுத்து சென்ற போதும் கட்டாய மதமாற்றம் செய்யாதது, இருந்தும் எம்மை படையெடுத்து வந்த அந்நியர்கள் எம்மை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இன்றும் கூட எம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர். இந்துமதம் எமக்கு தந்த சுதந்திரத்தை வேற்று மதத்தவர்கள் ஏன் எம்மவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி வருகின்றார்கள். இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நாம் பிற மதங்களின் சின்னங்களையே அணிந்திருப்போம்.

நாம் ஒன்றும் மற்ற மதத்தவர் போன்று மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் கொள்கையுடைய ஈனப்பிறவிகள் அல்ல. எமக்கு வெளிநாட்டிலிருந்து மத அழிப்பிற்கென பண உதவியோ பொருளுதவியோ கிடைப்பதில்லை. காதல் எனும் வலை விரித்து திருமணமெனும் ஆயுதத்தால் எம்மவரை மதம் மாற்றுவோர் நாமில்லை.

இனியும் நாமிதை சுட்டி காட்டாதிருந்தால் நாம் கடவுளுக்கு செய்யும் துரோகமாகும்' என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • Mrs.N.Sanjeepan Saturday, 15 February 2014 08:34 AM

    ஆம் இதனை நான் ஆதரிக்கிறேன். எம் மதம் போல் எம் மதமும் மண்ணில் காணேன்.

    Reply : 0       0

    ibnu aboo Saturday, 15 February 2014 03:44 PM

    பாவம். முன்பு மண் பறிபோகிறது என்றார்கள். இப்போது மதம் பறிபோகிறது என்கிறார்கள். மதம் பற்றி தீர்மானிப்பதும் மனித உரிமைதான்..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .