2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பிரதிஷ்டை....

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் புத்தபெருமானின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.சாந்த திலகரட்ண தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் உதவிப் பொலிஸ்மா அதிபர் யு.கே.திசானாயக்க,  சிரேஷ்ட பொலிஸ் அத்திதயட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தபெருமானின் திருவுருவச்சிலையானது ஒட்டுசுட்டான் பௌத்த ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சுபநேரமான 10.24 இற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .