2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நடுக்காட்டில் பெண்ணுக்கு பிரசவம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வன்னேரிக்குளம் 9ஆம் கட்டையினைச் சேர்ந்த பெண்ணொருவர் 17 கிலோமீற்றர் அப்பால் இருக்கும் அக்கராயன் வைத்தியசாலைக்கு வரும் வழியில் நடுக்காட்டில் முச்சக்கரவண்டிக்குள் குழந்தையினைப் பிரசவித்த சம்பவம் ஒன்று இன்று (16) அதிகாலை 1 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அக்கராயன் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேற்படி பெண்ணிற்கு இன்று (16) அதிகாலை பிரசவ வலி ஏற்படவே 17 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் அக்கராயன் வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இருந்தும் அப்பெண்ணிற்கு இடைவழியே காட்டுப்பகுதியில் வைத்து பிரசவ வலி அதிகரித்த நிலையில் குழந்தையை பிரசவித்துள்ளார். தற்போது குழந்தையும் தாயும் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்னேரிக்குளத்தில் இருக்கும் வைத்தியசாலையில் வைத்தியர், வளங்கள் மற்றும் அம்புலன்ஸ் வசதிகள் இல்லாத காரணத்தினால், வன்னேரிக்குளப் பகுதியில் வசிக்கும் மக்கள் அக்கராயன் வைத்தியசாலைக்கு அல்லது 27 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றே சிகிச்சை பெறவேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .