2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சங்கிலி திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 16 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற பெண்ணொருவர் அங்கு மேசையில் வைக்கப்பட்டிருந்த 2 ½ பவுண் சங்கிலியினைத் நேற்று (15) திருடி அதனை தனது உள்ளாடைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், தொடர்ந்து அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிலும் ஈடுபடுத்துமாறும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் இன்று உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபரை பதில் நீதவான் முன்னிலையில்  இன்று (16) ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள வீட்டிலிருந்த சிறுமி ஒருவருக்கு தாயார் அணிவித்த சங்கிலியினை குறித்த சிறுமி நேற்று (15) கழற்றி மேசையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் மேற்படி வீட்டுக்காரருக்கு தெரிந்த ஒரு பெண் வீட்டிற்கு வந்தவேளை மேசையிலிருந்த சங்கிலியினை திருடி அதனை தனது உள்ளாடைக்குள் வைத்துள்ளார். தொடர்ந்து மேசையின் மேலே இருந்த சங்கிலியினைத் தேடியபோது அது அங்கு இருக்காத காரணத்தினால் வீட்டு உரிமையாளர் உடனடியாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டில் வீட்டிற்கு வந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த பெண்ணினைக் சோதனை செய்த போது, அவரது உள்ளாடைக்குள் திருடப்பட்ட சங்கிலி இருந்தமையையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .