2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மீன் சந்தைக்கான சைக்கிள் தரிப்பிடம் அனுமதியின்றி உணவகமாக மாற்றம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மீன்சந்தைப் பகுதிக்கான சைக்கிள் தரிப்பிடத்தை மன்னார் நகரசபையில் எவ்வித அனுமதியும் பெறாது தனி நபர் ஒருவர் அதனை உணவகமாக மாற்றியதாக மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன் தெரிவித்தார்.

இதற்கு நகரசபையில் எவ்வித அனுமதியும்; பெறாது, நகரசபைத் தலைவர் தன்னிச்சையாக தனி நபர் ஒருவருக்கு உணவகம் நடத்துவதற்கு அந்த இடத்தை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மேற்படி சைக்கிள் தரிப்பிடமானது ஒரு வருடத்திற்கும் மேலாக உணவகமாக இயங்கிய நிலையில், சந்தைக்கு வரும் மக்கள் சைக்கிள்களை வீதிகளில் நிறுத்துவதாகவும் அவர் கூறினார்.

தற்போது மேற்படி உணவகம் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கைமாறியுள்ள நிலையில், மேற்படி உணவகத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மக்கள் தன்னிடம் முறைப்பாடு செய்த நிலையில், இதற்கான  துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  மன்னார் நகரசபை செயலாளர் பிரிட்டோ லெம்பட்டின் கவனத்திற்கு தான் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .