2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஐ.நாவின் கண்கானிப்பில் இடைநிலை நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும்: தீர்மானம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


பிரித்தானிய அரசு இலங்கை தீவில் இருந்து வெளியேறிய காலத்தில் இருந்து இற்றை வரைக்கும் நடைபெறும் முழு விடங்களையும் விசாரிக்கும் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெறவேண்டும். நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டமிட்ட இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்ககூடியவகையில் சர்வதேச சமூகத்தினுடைய பாதுகாக்கும் பொறுப்பை பயன்படுத்தி தமிழர் தாயக பிரதேசத்தில் ஐ.நாவினுடைய கண்கானிப்பிலே இடைநிலை நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற (16) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நான்காவது வருடாந்த பொதுசபை கூட்டத்தின்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
 
'ஜெனீவா எமக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இதன்போது கொண்டுவரவுள்ள தீர்மானம் தமிழ் தேசிய மக்கள் முன்னிணியும் தமிழ் மக்களும் ஆதரிக்க கூடிய தீர்மானமாக அமைவதற்கு முதலாவதாக தமிழினத்திற்கு இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை அடையாளப்படுத்த வேண்டும். அந்த இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டு இருப்பதனையும் அடையாளப்படுத்த வேண்டும்.

வெறுமனே போhக்குற்றம் என்றும் அந்த போர் இடம்பெற்ற கடைசி மூன்று வருடங்களையும் விசாரிக்கும் வகையில் அந்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த தீர்மானத்தை எதிர்க்கவேண்டும் என்பதுவே எங்களுடைய கருத்தாகும்.

அத்துடன் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையூடாக ஓர் தீர்வை எட்டுவதற்கு நாங்கள் ஓர் நியாயமான கால அவகாசத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். அந்த கால அவகாசத்திற்கு பிற்பாடும் இலங்கை அரசு இன்றைய நிலையில் இயங்குவது போல் தொடர்ந்தும் செயற்பட்டால் ஜனநாயக உரிமையின் அடிப்படையிலே ஓர் சர்வதேச பொறிமுறையில்; எங்களுடைய மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகள் என்ன என்பதனை அறியக்கூடியவகையிலே பொறிமுறையொன்றை உருவாக்கி நிரந்தர தீர்வை தமிழ் மக்கள் தீர்மானிக்க கூடிய வகையில் சர்வதேச சமூகம் திட்டமொன்றை அமைக்க வேண்டும்' என அந்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .