2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

த.தே.ம.மு.செயற்குழு விபரம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்        


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2014 ஆம் ஆண்டிற்கான தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4ஆவது வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டம் வவுனியா நகரசபையின் கேட்போர் கூடத்தில்

ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. இதன்போதே புதிய மத்திய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராக செல்வராசா கஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளராக சந்திரசேகரன் மணிசேகரன், பெருளாளராக கனகையா கிருஸ்ணகுமார், தேசிய அமைப்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன், பிரசாரச் செயலாளராக சிவகுரு இளங்கோ, உபதலைவர்களாக இ.எ.ஆனந்தராஜா, வி.இந்திராணி, சிவபாதம் கஜேந்திரகுமார், வி.றமணன், த.சுரேஸ் ஆகியோரும் உப செயலாளராக தங்கராஜா காண்டீபன், உப பெருளாளராக முத்துலிங்கம் கஜேந்திரராஜா, நிர்வாகச் செயலாளராக  மடோனா சந்தியோகு, இளையோர் அணித்தலைவராக இன்னாசிமுத்து சத்தியசீலன், மகளீர் அணிப் பொறுப்பாளராக திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .