2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம், முத்துமாரிநகர் பகுதியில் திங்கட்கிழமை (17) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின்  மோட்டார் சைக்கிள் மோதியதால், படுகாயமடைந்த மதியாமடு கிராமத்தை சேர்ந்த ம.சின்னத்துரை (வயது 65) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குளத்தில் பனங்கிழங்குகளை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இவர் விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

படுகாயமடைந்தவர் உடனடியாக புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .