2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் நகரசபை பிரிவில் அபிவிருத்தி திட்டங்கள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பணிப்புரைக்கமைய கிராமிய மட்டத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பங்கேற்பு ரீதியான அபிவிருத்தி திட்டங்களுக்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் மன்னார் நகரசபை பிரிவுக்குட்;பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  மன்னார் நகரசபை உறுப்பினர் இ.குமரேஸ் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக திங்கட்கிழமை (17) கீரி, பட்டித்தோட்டம் ஆகிய கிராமங்களைக் கொண்ட பிரிவிலும் சாவக்கட்டு பிரிவிலும் மூர்வீதி பிரிவிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்னார் நகரசபை  பிரிவுக்குட்பட்ட 15 கிராம அலுவலகர் பிரிவுகளை 03 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுகளுக்கும் நகரசபை உறுப்பினர்கள், கிராம அலுவலகர்கள் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டு 05 தினங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கான தரவுகள் சேகரிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மேற்படி பிரிவுகளிலுள்ள மக்களைச் சந்தித்து முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அவர்களிடமே தரவுகள் சேகரிக்கப்படும்.  பின்னர் அவுஸ்திரேலியாவின் நிதியுதவியை பெற்று தேவையான அபிவிருத்தி திட்டங்களை மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .