2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆயர் தொடர்பாக வெளியான துண்டுப்பிரசுரத்திற்கு வருந்துகின்றோம: இந்து மகா சபை

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 'மன்னார் மாவட்ட இந்து சங்கம்'  என்ற பெயரில் இன்று புதன்கிழமை வெளியான போலி துண்டுப்பிரசுரம் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்வதாக மன்னார் மாவட்ட இந்து மகா சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மகாசபை புதன்கிழமை (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவதாவது,
'மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த நாவலர் திருவுருவ படமும் இடபக்கொடியும் தாங்கிய பதாதை  கடந்த 6 ஆம் திகதி உடைக்கப்பட்டு காணப்பட்டது.

இந்த விரும்பத்தகாத நிகழ்வு தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை மன்னார் ஆயர் ஆயருடன் அன்றைய தினமே கலந்துரையாடியது. இச்சம்பவம் தொடர்பாக மன்னார் ஆயர் தனது மனவருத்தத்தினை தெரிவித்ததுடன் அவ் இடத்திலேயே பதாதையை மீள அமைப்பதற்கான தனது ஆதரவையும் முழு மனதுடன் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மன்னார் ஆயர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் அவருக்கு எதிராக ஒரு சிலரால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே நாம் கருதுகின்றோம்.

அவருடைய பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையில் வெளியான துண்டுப்பிரசுர செய்தி எமக்கும்,எமது சமூகத்திற்கும் மிகுந்த வேதனையளிக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மத நல்லிணக்கத்தினை குழப்புவதற்காக ஒரு சிலரால் மேற்கொற்கொள்ளப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்' என மன்னார் மாவட்ட இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .