2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுவனை தாக்கிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்திலுள்ள கடையில் உணவுப் பொருட்களை திருடியதாகக் கூறப்படும் சிறுவனை  தாக்கிய சந்தேகத்தின் பேரில் இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேற்படி கடையில் இடம்பெற்ற திருட்டு தொடர்பில்  தனது நண்பர் ஒருவரின் உதவியுடன்  கடை உரிமையாளர், சிறுவனை பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில், சிறுவனை எதிர்வரும் 23ஆம் திகதி மத்தியஸ்த சபை விசாரணைக்கு வருமாறு கூறி கடந்த புதன்கிழமை அவனை பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வீடு சென்ற குறித்த சிறுவன் சுகவீனமுற்ற நிலையில் நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு பெற்றோர் தெரியப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த சிறுவன் உணவுப் பொருட்களை திருடியபோது  கடை உரிமையாளரும் அவரது நண்பரும்  சிறுவனை தாக்கியதாகவும் இதனால், சிறுவனுக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .