2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் கடனுதவிச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

புனர்வாழ்வு பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் கடன் உதவிக்கான திறன் விருத்திச் செயலமர்வுகள் செவ்வாய்க்கிழமையிலிருந்து (25) 03 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் மு.கயோதரன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமையும் (25), கரைச்சி மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவுகளில்; புதன்கிழமையும் (26) பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவில் வியாழக்கிழமையும் செயலமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இந்தச் செயலமர்வுக்காக,   மேற்படி 04 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமிருந்து சுயதொழில் கடன் உதவிக்கு விண்ணப்பித்த 400 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இந்தச் செயலமர்வுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் தங்களது  விபரங்களை அந்தந்த  பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .