2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மண்ணுக்கு ஏற்ற பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும்: குணபாலன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

எமது மண் வளத்துக்கேற்ற பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன்,  பொருத்தமற்ற பயிர்ச் செய்கைகள் மூலம் எமது இலக்குகளை வீணாக்கக் கூடாதெனவும் துணுக்காய் பிரதேச செயலர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்;பட்ட பிரதேசங்களில் இறப்பர் செய்கை மேற்கொள்ளும் நோக்கில் 2012ஆம் ஆண்டு முதல் இறப்பர்மரக் கன்றுகள் விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வந்தன. இதுவரையிலும் 1,000 இற்கும் மேற்பட்ட கன்றுகள் நடுகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பிரதேச செயலர் தெரிவிக்கையில்,

விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட இறப்பர்மரக்; கன்றுகள் வளரவில்லை. இதன் மூலம் எதுவித பயனும் இல்லை. இது  எமது பிரதேசத்திற்கு ஏற்ற பயிர் இல்லையென்பதால் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் செய்கையாளர்களின் நேரமும் வளமும் விரயமாகியுள்ளன.

எமது பிரதேசத்திற்கு ஏற்ற, எமது மண்ணில் செய்யக்கூடிய பயிர்ச் செய்கைகளினை மேற்கொள்வதிலேயே விவசாயிகள் அக்கறை செலுத்த வேண்டும். அதுவே பயன்தரும். அதனை விடுத்து வேறு பயிர்ச் செய்கைகளில் வளங்களை வீண் விரயம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .