2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் காலபோக வேளாண்மை பாதிப்பு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த ஆண்டு மாரி மழை பொய்த்துப் போனதால் 2013 - 2014 காலபோக வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விவசாயச் செய்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையை மட்டும் நம்பிய விவசாயச் செய்கை முழுமையாக அழிந்துள்ளதோடு சிறுதானிய மேட்டுநில பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் சிறு குளங்களை நம்பிய நெற்செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாகாண நீர்ப்பாசன குளங்களுக்குட்பட்ட  சில பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கட்டுக்கரைக் குளத்தில் உள்ள தற்போதைய நீர் மட்டத்தை வைத்து சிறுபோகப் பங்கீடு நடைபெறுகின்றது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முதல் நடந்தது போல் எல்லை மீறிய செய்கை தொடர்ந்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு விவசாயச் செய்கை படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கட்டுக்கரை நீர் பகிர்ந்து வழங்குவதில் சீரான முறையில் நீர் முகாமைத்துவம் ஒரு காலமும் பேணப்படுதில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதிலும் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் குடும்ப வாழ்விலும் வறுமை நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

தமக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதீக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்..

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .