2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வட மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண சுகாதார மேம்பாட்டுக்காக திட்டம் தயாரிப்பது தொடர்பான கூட்டம் இன்று (24) வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது வட மாகாணத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதன்போதுள்ள சாதக பாதக நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இக்கலந்துரையாடலை நாளையும் மேற்கொண்டு சுகாதார திட்டத்தினை வரைபு வடிவில் எடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .