2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாந்தை கிழக்கு பொதுச்சந்தை திறப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் நெல்சிப் திட்டத்தின் கீழ்,  9.7 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தைக் கட்டிடத்தொகுதியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  திறந்துவைத்தார்.

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதலைவர் சி.செந்தூரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25)  நடைபெற்ற திறப்பு விழாவில்,  பெயர்ப்பலகையை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்; ஹுனைஸ் பாரூக் திரைநீக்கம் செய்தார்.

இதில் வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவப்பிரகாசம் சிவமோகன், மேரி கமலா குணசீலன், வீரபாகு கனகசுந்தசுவாமி, அன்ரனி ஜெகநாதன், கேசவன் சயந்தன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .