2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கரைச்சி, கண்டாவளையைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு கடனுதவிச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


புனர்வாழ்வு பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் கடன் உதவிக்கான திறன் விருத்திச் செயலமர்வு  செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பமாகியது. இந்த நிலையில்,  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை  (26) நடைபெற்ற செயலமர்வில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 200  பேர் கலந்துகொண்டனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில்  கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சரவணபவன் மோகனபவன் தலைமையில் நடைபெறுகின்ற செயலமர்வில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இதன்போது, எவ்வாறு சுயதொழில் கடன்கள் மூலம் திறன்களை அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்படுகின்றன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (25)  நடைபெற்ற இந்தச் செயலமர்வு,  பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவில் வியாழக்கிழமை (27)  நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .