2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மூப்பன்குளம் புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட  சிராட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள மூப்பன்குளம் 25 மில்லியன் ரூபா செலவில் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹாலிங்கம் தயாநந்தன்  தெரிவித்தார். 

மிக நீண்டகாலமாக  புனரமைக்கப்படாமலுள்ளதால் இங்குள்ள விவசாயக் குடும்பங்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றன.

இக்குள புனரமைப்பு தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்  ஹூனைஸ் பாருக் ஊடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாட் பதியுதீனிடம் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினர்.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  கவனத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  கொண்டுவந்த நிலையில்,  இக்குள புனரமைப்புக்கு  நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .