2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு சக்தியூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களை சக்தியூட்டும் நிகழ்வு இன்று (1.3) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அதிதியாக கலந்து கொண்டிருந்த இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனியா மற்றும செட்டிகுளம் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 70 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், ஊழலை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கோடு சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு வலுவூட்டும் வகையில் இந் நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சிவில் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து சமூக பிரச்சனைகள் தொடர்பிலான கருத்துக்கள் கோரப்பட்டதுடன் அவைற்றுக்கான தீர்வுகள் விரைவில் வழங்குவதாகவும் வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கிராமசேவகர்கள், சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள், வவுனியா, கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .