2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலை அனுமதி; பணம் கோரப்படின் சட்ட ஆலோசனை பெறமுடியும்: டிரான்ஸ்பரன்சி இன்ரநெஷனல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் பாடசாலை அனுமதிகளின்போது பணம் கோரப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் சட்ட உதவிக்குரிய  ஆலோசனைகளை பெறமுடியுமென டிரான்ஸ்பரன்சி இன்ரநெஷனல் நிறுவனத்தின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்காக வைரவர் கோவில் வீதி, இரண்டாம் குறுக்கு தெரு, வவுனியா என்ற  முகவரியுடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக இணைக்கும்போது பணம் கோரப்படுவதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான பணம் கோரப்படும் நடவடிக்கைகளின்போது  பலரும் இதனை எவ்வாறு கையாள்வதென்று  தெரியாத நிலையில் முறைப்பாடுகளைச் செய்வதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .