2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடலில் மூழ்கி மீனவர் பலி

Menaka Mookandi   / 2014 மார்ச் 02 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலை கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை கடற்தொழிலுக்குச் சென்ற காட்டுராஜா நல்ல தம்பி (வயது-36) என்ற 3 பிள்ளைகளின் தந்தை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டாஸ்பத்திரி  என்ற முகவரியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வலை கடலில் சிக்கிய நிலையில் அதனை சீர்செய்யும் நடவடிக்கையில் படகை விட்டு கடலில் இறங்கியுள்ள இவர் கடலில் மூழ்கியதாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சக மீனவர்களுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்த தேடுதல்களை மேற்கொண்ட போது குறித்த மீனவர் வலையில் சிக்கிய  நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தலை மன்னார் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .