2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள  'நலம் தரும் பலம்' 101 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை  வங்காலை பொதுமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இப்பரிசோதனையின்போது  வங்காலை கிராமத்தைச் சேர்ந்த  150 இற்கும் மேற்பட்டவர்கள்  தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

இப்பரிசோதனைகளை மன்னார் பொது வைத்தியசாலையின் தொற்றா நோய்களுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் அன்ரன் சிசில்,  வைத்தியர்களான ரூபன் லெம்பேட், யூட் பச்சேக் ஆகியோர்  மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .