2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிவராத்திரிக்காக இடைநிறுத்தப்பட்ட மன்னார் புதைகுழி தோண்டும் நடவடிக்கை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி சிவராத்திரிக்காக இடைநிறுத்தப்பட்ட நிலையில் 32ஆவது தடவையாக மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் திங்கட்கிழமை (03) தோண்டப்பட்டது.

இதன்போது, மேற்படி மனித புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட இல்லையென்பதுடன், மீட்கப்படவுமில்லை.
அத்துடன், இன்றையதினம் (03) மீண்டும் மேற்படி மனித  புதைகுழியை அகலப்படுத்தும் முகமாக அளவீடுகள் செய்யப்பட்டு வரைபடமும் தயாரிக்கப்பட்டது.

இதன்போது, மன்னார் நீதவான் முன்னிலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இன்றையதினம் (03) புதைகுழி தோண்டப்பட்டபோது அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினரும்; குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவினரும்;  சமூகமளிக்கவில்லை.

மேற்படி மனித புதைகுழி 33ஆவது தடவையாக புதன்கிழமை (05) தோண்டப்படவுள்ளது.

மேற்படி மனித புதைகுழியிலிருந்து இதுவரையில்  80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .