2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காணி அபகரிப்புக்கும் எனக்கும் தொடரபில்லை: பதியூதீன்

Menaka Mookandi   / 2014 மார்ச் 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சாவற்கட்டு 30 வீட்டுத்திட்டத்தில் உள்ள பொதுக்காணியொன்று அபகரிக்கப்படும் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

மேற்படி காணி அபகரிப்புக்கு வட மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகியிருந்த. இந்த செய்திகள் தன்னை தொடர்புபடுத்தியே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேற்படி காணி விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார், சாவற்கட்டு 30 வீட்டுத்திட்ட கிராமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் பொதுக்காணியினை 3பேர் போலி ஆவணங்களை தயாரித்து அதனை அபகரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வருகின்றது.

அதில் எனது பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காணி அபகரிப்பு முயற்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என்னையும் எனது மாகாணசபை உறுப்புரிமையினையும் கலங்கப்படுத்தும் முகாக இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நான், மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படப்போவதில்லை. குறித்த காணியை அம்மக்களுக்கு உரிய முறையில் மீட்டுக்கொடுத்து அதில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள என்னால் இயன்ற உதவிகளை மேற்கொள்வேன் என றிப்கான் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .