2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விபத்தில் உயிரிழந்தவரின் உடமைகளை திருடியவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் விபத்தில் உயிரிழந்த ஆசிரியையின் உடமைகளை திருடிய நபரொருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார்.

இதன்போது குறித்த ஆசிரியையின் கைத்தொலைபேசி மற்றும் வங்கி கடன் அட்டைகள் திருடப்பட்டு பணம் பெறப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா பொலிஸாரிடம் ஆசிரியையின் கணவர் முறைப்பாடு செய்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை  அடுத்து இன்று (16) சந்தேகத்தின் போரில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .