2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மன்னார் மீனவர்களுக்கு மீண்டும் பாஸ்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு மீண்டும் பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதென்று  மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இதனால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் நிலை  ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த காலத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடற்படையினர் கடற்கரையில் சோதனை மேற்கொண்டபோது பாஸ் உள்ள மீனவர்கள் மாத்திரமே கடலுக்குச் செல்லக்கூடிய நிலைமை காணப்பட்டது.

பாஸ் நடைமுறையால் மீனவர்கள் உரிய நேரத்திற்கு தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால், உரிய நேரத்தில் தொழில் நடவடிக்கைகளையும் மீனவர்களினால் மேற்கொள்ள முடியாதிருந்தது.

2013ஆம் ஆண்டு  பாஸ் நடைமுறை விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் மீனவர்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் எவ்வாறு பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டதோ, அதேபோன்று மீண்டும் பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .