2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் கீழுள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பிராந்திய நிலையம் ஆரம்பிப்பதற்காக  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கட்டிடத்தொகுதியின் ஒருபகுதியை வழங்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்வாண்மையுடன் சமூகப் பணியாளர்களை உருவாக்கும் நோக்குடன் இந்தத் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

இந்நிறுவனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பட்டங்களை வழங்குவதற்குரிய உயர் கல்வி நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், சமூகப் பணியில் இளமாணி மற்றும் முதுமாணி பட்டக் கற்கைகளை போதித்து பட்டங்களை வழங்கி வருகின்றது.

எதிர்வரும் மே மாதம் முதல் வாரம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிறுவனத்தில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் விரிவுரைகள் நடைபெறவுள்ளன.   கொழும்பிலிருந்து விரிவுரையாளர்கள் வந்து விரிவுரையாற்றவுள்ளதாகவும்  வெள்ளிக்கிழமை (18) அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .