2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

முல்லைத்தீவுத் துணைக்காய்ப் பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து கீழே வீழ்ந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி இன்று (18) உயிரிழந்துள்ளதாக துணுக்காய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்காவில் வீதியினைச் சேர்ந்த எஸ்.வரதகுமார் (40) என்ற மூன்று  பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது பற்றித் தெரியவருவதாவது,

குறித்த நபர் வியாழக்கிழமை (17) வயலில் அறுவடை செய்த நெல்லினை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வீடு வந்தவேளை மழை லேசாகத் தூறிய காரணத்தினால் நெல்லினை தறப்பாலினால் மூடி அதன் மேல் தான் ஏறியிருந்த பயணித்துள்ளார்.

இதன்போது இடைநடுவில் தவறி வீழ்ந்த இவர் பலத்த காயங்களுக்குள்ளாகி முதலில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .