2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புலிச் சந்தேகநபர் தப்பியோட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

சிறைச்சாலை காவலர்களின் பாதுகாப்பின் கீழ், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (20) தப்பிச் சென்றுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின்; பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இம்மாதம் முதலாம் திகதி, அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில், இவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இச்சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .