2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புலிகளுக்கு காணி வழங்கிய பெண் கைது

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில் செயற்பட்ட சந்தேகநபர்களுக்கு தனது பெயரில் காணியொன்றை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சி பிரதேச பெண்ணொருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய எஸ்.பத்மாவதி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் பெயரில் வவுனியா நகரில் சில குழுவினர் காணியொன்றை கொள்வனவு செய்துள்ளனர். இவ்வாறு காணி கொள்வனவில் ஈடுபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த காணி கொள்வனவில் ஈடுபட்டவர்களிடமிருந்து குறித்த பெண்ணுக்கு ஒருதொகை பணம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்தே இந்தப் பெண், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, குறித்த பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .