2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மன்னாரில் அமைதிப் போராட்டத்திற்கு அழைப்பு : மன்னார் சர்வமதப் பேரவை

Super User   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறிச்சிக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் கிராம மக்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை நீக்கக்கோரியும்,  இந்த மக்களின் காணிகளை அபகரிப்பவர்களுக்கு எதிராக மன்னாரில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் மறைமாவட்டத்தின் சர்வமத இணைப்பாளர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் இன்று (23) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 9.00 மணிக்கு மன்னார் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில் இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு மன்னார் சர்வமதப் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

மன்னார் ஆயர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மத அமைப்புக்களின் ஒத்துழைப்போடும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 

அன்றைய தினம் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை மன்னார் நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடி எமது முயற்சிக்கு ஆதரவு தருமாறு சகல இன மக்களையும் மன்னார் சர்வமதப் பேரவை வேண்டிக்கொள்கிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .