2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரண்டு பாடசாலைகளின் கூரைகள் சேதம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம், கிருஷ்ணபுரம் இராமகிருஷ்ணா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளின் தற்காலி கொட்டகைகளின் (அரைநிரந்தக் கட்டிடங்களின்) கூரைகளும் இன்று திங்கட்கிழமை (21) சேதமடைந்துள்ளதாக மேற்படி பாடசாலைகளின் அதிபர்கள் கூறினார்கள்.

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு காற்றில் கூரைகள் தூக்கி எறியப்பட்டுள்ளமையினால் இடநெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அதிபர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

கிளிநொச்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வீசி வரும் காற்றினால் கிளிநொச்சி மாவட்டத்தின் விவேகானந்த நகர், சிவபுரம், பன்னங்கண்டி, உமையாள்புரம் ஆகிய கிராமங்களிலுள்ள 20 தற்காலிக வீடுகளும் கடந்த 16ஆம் திகதி சேதமடைந்தன.

இந்நிலையில், தொடர்ந்து வீசி வருகின்ற காற்றினால் பாடசாலையின் தற்காலிக கொட்டகைகளின் கூரைகளும் சேதமடைந்தன.

மேற்படி இரு பாடசாலைகளும் மக்களின் மீள்குடியேற்றத்தின் பின்னர் மீளவும் 2010 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நிரந்தரக் கட்டிடங்களின் பற்றாக்குறையினால் தற்காலிக கொட்டகைகளிலே இன்றும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X