2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அதிரடிப்படை துருப்புகாவி வண்டி மோதி பெண் படுகாயம்

Gavitha   / 2014 ஜூலை 21 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்னாத்

வவுனியா தர்மலிங்கம் வீதியில் இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற வாகனவிபத்தொன்றின் போது பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த வாமதேவன் ரேகா (வயது 35) என்பவரே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் மீது அதிரடிப்படையினரின் துருப்புகாவி வண்டி மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் அப்குதியில் கூடிய  பொதுமக்கள், குறித்த   வாகனத்தை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சூழ்ந்துகொண்டனர். இந்த நிலையில் அங்கு அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன்,  பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு  வருகை தந்தனர்.   வாகன சாரதியை கைதுசெய்து  வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதுடன், குறித்த வாகனத்தையும் எடுத்துச்சென்றனர்.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த பெண் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் விசேட மருத்துவ பரிசோதனைகளை தமது வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X