2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியா கல்வாரி திருத்தலத்தில் திருச்சொரூபங்கள் சேதம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள  கல்வாரி திருத்தலத்தில் இருந்த  08 திருச்சொரூபங்கள் இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில்  அத்திருத்தலத்தின் பங்குத்தந்தை இன்று வியாழக்கிழமை காலை (24) முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருத்தலத்தில் மின்குமிழ்களை அணைப்பதற்காக இன்றையதினம் (24)  அதிகாலை இங்கு வந்த  பொதுமக்கள் திருச்சொரூபங்கள்,  சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

இது தொடர்பில்  பங்குத்தந்தைக்கு இவர்கள் தெரியப்படுத்தினர்.

கல்வாரி திருத்தலத்திலுள்ள  15 தொகுதி திருச்சொரூபங்களில் 08 சிலைகள் நேற்று புதன்கிழமை (23)  இரவு உடைக்கப்பட்டுள்ளன. சில திருச்சொரூபங்கள்  பாரியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. யூதர்களாக சித்தரிக்கப்பட்டிருந்த திருச்சொரூபங்களே அதிகளவில் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.  மாதா திருச்சொரூபமொன்றின்  கையும் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக இத்திருத்தலத்தின் தலைவர் என்.அருளானந்தம்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X