2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வைத்தியசாலையில் தீக்காயத்துடன் கர்ப்பிணி அனுமதிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராமத்தில் வசித்துவரும் கர்ப்பிணித்தாயொருவர் தீக்காயங்களுடன் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியாசலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

02 பிள்ளைகளின் தாயான (வயது 24) இவர், நேற்று புதன்கிழமை இரவு   அயலவர்களின் உதவியுடன்
மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இவரது இடுப்புக்கு  மேல் பகுதி  தீயினால் முழுமையாக எரிந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X