2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளிநொச்சி குடிநீருக்காக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டம், குடிநீருக்காக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாவட்டமாக மாறி வருகின்றதாகவும் நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் கவனம் எடுத்துச் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று வியாழக்கிழமை (24) கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவட்டச் செயலாளர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியினால், நீரிற்காக பெருமளவு நெருக்கடியினை எதிர்நோக்கி வரும் மாவட்டமாக மாறிவருகின்றது. இது தொடர்பில் கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம் என அவர் மேலும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான மீளாய்வுகள் இடம்பெற்றன.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பிலும், விவசாயம் சார்ந்த (நீர்ப்பாசனம், கமநலம், ஆராய்ச்சி, விலை அத்தாட்சி சேவை நிறுவனம்) ஸ்தாபனங்களின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் விவசாய சம்மேனங்களின் பிரதிநிதிகள், ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X