2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆயுதங்கள் வேண்டும் என கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மதுவரித் திணைக்கள அலுவலர்களின் பாதுகாப்புக்கு, ஆயுதங்கள் தேவையென மதுவரித் திணைக்கள தலைமை அலுவலகத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மதுவரித் திணைக்களத்தினர் இன்று வியாழக்கி;ழமை (24) தெரிவித்தனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு மதுவரித் திணைக்களம் மட்டும் உள்ளது.
இந்நிலையில், இரண்டு மாவட்டங்களிலும் நிலவும் குற்றச் செயல்கள் தொடர்பில் மதுவரித் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கும் போது, அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகும் நிலைகள் ஏற்படுகின்றன.

அத்துடன், மதுவரித் திணைக்களத்தினரின் நடவடிக்கையின் போது பொலிஸாரினையும் அழைத்துச் செல்ல முடியாத நிலையிருக்கின்றது.

இதனால், அலுவலர்களின் பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கி ஆயுதங்களை வழங்கும் படி திணைக்களத்தினர் தலைமை அலுவலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் அண்மையில் நடந்த கண்டாவளைப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் தெரிவித்திருந்ததாக திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X