2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருச்சொரூபங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த திருச்சொரூபங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த திருச்சொரூபங்களில் சுமார் 08 திருச்சொரூபங்கள் இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. கல்வாரி திருத்தலத்திலுள்ள 15 தொகுதி திருச்சொரூபங்களில் உள்ள திருச்சொரூபங்களே இவ்வாறு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக இந்துக்களின் ஆலயங்கள் மீது தாக்குதல்கள் மேறகொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து முஸ்ஸிம்களின் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் திருச்சொரூபங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சம்பவங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீதும் தொடர்ச்சியாக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் மதச் சுதந்திரம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு சிறுபான்மையின மக்களையும், அவர்களின் வழிபாட்டுத் தளங்களையும் பாதுகாப்பது தொடர்பில் அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றது.

வட, கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன. அற்கு நாம் இடமளிக்கக் கூடாது. எனவே இத்தாக்குதல் சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது' என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X