2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சேதனப் பசளை ஊக்குவிப்புத் திட்டத்திற்கு விவசாயிகள் தெரிவு

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மத்திய விவசாய அமைச்சின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் சேதனப் பசளை உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்தினைச் சேர்ந்த 725 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கைகளில் இராசயன உரங்களின் பாவனைகள்; அதிகரித்து காணப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்தி சேதனப் பசளை பாவனையினை ஊக்குவிக்கும் வகையில் மத்திய விவசாய அமைச்சின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டாவளைப பிரதேசத்தின் முரசுமோட்டை, புன்னைநீராவி, புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் இருந்து 725 விவசாயப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் சேதனப்பசளை உற்பத்திக்கான, பொலித்தீன் மற்றும் பொஸ்பேற் என்பனவும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X