2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வவுனியாவைச் சேர்ந்த சாரணிய மாணவன் ஜப்பான் பயணம்

Thipaan   / 2014 ஜூலை 26 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சாரண துருப்பைச் சேர்ந்த கணேசலிங்கம் யதுகனேஷ் இலங்கை சாரண சங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் பெற்று  Inspire japan- 2014 எனும் நிகழ்வில்   இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவர் கொண்ட குழாமில் இவ் மாணவனும் பயணமாகவுள்ளார்.

இந்நிகழ்வு ஜூலை 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் இலங்கை குழாமில் குருநாகல் சென். அனீஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.கே.வி. ரொசான் விசமித் மற்றும்  இவர்களுக்கு பொறுப்பான சாரண தலைவராக, கோமாகம சாரண மாவட்டத்தைச் சேர்ந்த உதவி மாவட்ட ஆணையாளர் திரு லசந்த சஞ்சீவ விமலசிறியும் பயணமாகவுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வான அறிமுக விழாவும், இலங்கை தேசிய கொடியை கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மாவட்ட சாரண தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வுடன்  கொரிய சாரண சங்கத்தின் 4 ஆவது சர்வதேச அணி ஜம்பொறியில் கலந்து கொள்ளும் சாரணர்களின் நிகழ்வும் நடைபெற்றது.

இதன் சிறப்பு விருந்தினர்களாக ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளின் இலங்கைக்கான தூதுவராலயங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா, பிரதி பிரதம ஆணையாளர்  சிரசாலி, சர்வதேச ஆணையாளர்  ஜனபிரித் பெர்னாண்டோ, தேசிய பயிற்சி ஆணையாளர்  சரத் கொடகந்தாராச்சி, சாரண சங்கத்தின் பொருளாளர்  கமலநாத் ஜினதாச, வடக்கு, கிழக்கிற்கான விசேட ஆணையாளர்  எம்.எப்.எஸ். முகீட் இவர்களுடன் மாவட்ட சாரண பிரதிநிதிகள்  பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X