2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல்கொடுப்போம்: ரவிகரன்

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் நாம் குரல்கொடுப்போம்' என வட மாகாணசபையின் முல்லைத்தீவ மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'ஓமந்தையில் யாழ்.ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் மக்களின் உரிமைக்குரலை அழிக்கும் நோக்கிலானது.

காலங்காலமாக மக்களின் உரிமைக்குரலை அடக்கும் நோக்கில், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் இங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளன. மக்களின் உணர்வுகளின் குரலாக விளங்கும் ஊடகவியலாளர்களை அடக்குவதன் மூலம் மக்களின் உரிமைக்குரலை அடக்கிவிடலாம் என்று கருதியே இவ்வாறான அடக்குமுறைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு அடக்குமுறையின் போதும் ஊடக சகோதரர்கள் மீண்டும் மீண்டும் எழுந்தார்களே தவிர முடங்கி கிடக்கவில்லை.

தமிழ் மக்களின் உரிமைக்குரலாக மட்டுமின்றி, மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் பிரதிநிதிகளின் குரலாகவும் இன்று ஊடக சகோதரர்களே விளங்குகின்றனர்.

சினிமா பாணியில் ஓமந்தையில் அவர்கள் மீது நடாத்தப்பட்ட  அடக்குமுறைகள், உலக நீதியை கேள்விக்குள்ளாக்கும் இன்னொரு சாட்சியாகிறது. தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவ அடக்குமுறைகளின் இன்னொரு பதிவாகிறது.

ஓமந்தையில் ஊடகவியலாளர்கள் மீது திணிக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். எத்தனை அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் தமிழரின்  உரிமைக்குரல்களை அடக்கிவிடமுடியாது' என தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X