2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரு குழுக்களுக்கிடையில் மோதல்: மூவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரட்ணம் கபில்நாத்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் திங்கட்கிழமை(28) காலை இரு மாணவர் குழுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடு பகுதியில்  அமைந்துள்ள வியாபார கற்கைநெறி பீடத்தின் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலியே இரண்டாம் வருடத்தில் கல்வி கற்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு இடையில் கடந்த ஒரு சில மாதங்களாக கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகவும் அதுவே கைகலப்பாக மாறியதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், இரண்டாம் வருடத்தில் கல்வி கற்ற மூன்று மாணவர்களே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X