2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மூன்றுமுறிப்பு, சிறாட்டிக்குளம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்,ரி.பிருந்தாபன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, மூன்றுமுறிப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட இரு கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

இந்தக் கிராம அலுவலர் பிரிவில் மூன்றுமுறிப்பு மற்றும் சிறாட்டிக்குளம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளடங்குகின்றன.

இதில் மூன்றுமுறிப்பு பகுதியில் 173 குடும்பங்களைச் சேர்ந்த 555 பேரும், சிறாட்டிக்குளம் பகுதியில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேரும் வசித்து வருகின்றனர்.

இம்மக்கள் தங்கள் கிராமங்களுக்கு மின்சார வசதிகள் இல்லாமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச செயலகத்திடம் முறையிட்டிருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்திய நிலையிலேயே, அக்கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X