2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உயர் கல்வி கற்பதற்கு பண உதவி

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின், கல்வி வளர்ச்சிக்கான உதவியின் கீழ் உயர்கல்வி கற்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட க.ஜோன் என்ற மாணவனுக்கு 30 ஆயிரம் ரூபா நிதி உதவி திங்கட்கிழமை (28) வழங்கப்பட்டது.

இதேபோல், மேற்படி திட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் பயிலும் வி.குணலட்சுமி என்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இந்து வாலிபர் சங்கத்தின் அங்கத்தவரும் சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரியின் ஆசிரியருமான வி.மதிதரன் துவிச்சக்கரவண்டியினைக் கையளித்தார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம், அப்பிரதேசத்தினைச் சேர்ந்த மற்றும் யாழ்.மாவட்டத்தின் பிற இடங்களிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாழ்வாதார உதவிகளையும் இச்சங்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X