2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் தமிழ் பேசும் பெண் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

'முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில், முல்லைத்தீவில் மூவரும், புதுக்குடியிருப்பில் ஒருவருமாக நான்கு தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர்.

இன்னும் முள்ளியவளை, ஒட்டுசுட்டான், வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

எனவே, முல்லைத்தவு மாவட்டத்தில் தற்போது தமிழ் பேசும் பெண் பொலிஸார் குறைவாக இருப்பதால், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என முறையிட்டுள்ளனர்.

ஆகவே, மக்களின் சிரமங்களை கவனத்திற்கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்கிறோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X