2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆனைவிழுந்தானில் கால்நடை சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு வறட்சியால் ஏற்பட்ட நோய்த்தாக்கத்துக்கு சிகிச்சையளிக்கும் முகமாக  நடமாடும் கால்நடை சிகிச்சை முகாமை எதிர்வரும் வாரம் நடத்தவுள்ளதாக மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி திணைக்களம் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தது.

தற்போது நிலவுகின்ற வறட்சியால் ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கும்  குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதனால், கால்நடைகளில் வாய்களில் புண்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பில் மாவட்ட கமக்கார அமைப்பு தமது கவனத்துக்கு கொண்டுவந்தது. இந்த நிலையில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X