2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குழு மோதல் : மூன்றாம் வருட மாணவர்களுக்கு வகுப்பு தடை

George   / 2014 ஜூலை 29 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலையடுத்து வியாபார கற்கைகள் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி அ. புஸ்பநாதன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில நேற்று திங்கட்கிழமை (28) வியாபார கற்கைகள் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியா வளாகத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

திங்கட்கிழமை (28) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும் மாணவர்களை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்காக மூன்றாம் வருட மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, மாணவர்கள் சமரசம் செய்யும் பட்சத்தில் ஏனைய வருட மாணவர்களை போல் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் வகுப்புகள் இடம்பெறும் என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X