2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விசுவமடுவுக்கு குடிநீர் விநியோகம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் 10 நீர்த் தாங்கிகள் மூலம் கடந்த வாரம் முதல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக விசுவமடு பகுதியினைச் சேர்ந்த றெட்பானா, நாச்சிக்குடா உள்ளிட்ட சில கிராமங்களில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில், மேற்படி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் நோக்கில் தலா 1,000 லீற்றர் கொள்ளவுள்ள 10 நீர்த்தாங்கிகள் அந்தப் பிரதேசங்களில் வைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X