2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குறைபாடுகளுடன் இயங்கும் முல்லை மாவட்ட பொலிஸ் நிலையங்கள்

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் கீழ் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களும், பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, வெலிஓயா ஆகிய ஐந்து பொலிஸ் நிலையங்களிலும் அலுவலகம், தங்குமிட வசதிகளைக் கொண்ட கட்டடங்கள், ஆளனி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல குறைபாடுகள் காணப்பபடுகின்றன.

அத்துடன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் என்பனவற்றிற்கு நிரந்தர கட்டடங்கள் இல்லாமையினால் குறித்த நிருவாக நடவடிக்கைகள் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன.

ஏந்த நேரமும் மக்களுக்காக இரவு பகல் என்று பாராமல் பணியை மேற்கொள்கின்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையினால் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தனவிடம் கேட்ட போது, 'இந்த குறைபாடுகள் தொடர்பில் பலர் முறையிட்டுள்ளனர். எனினும், இது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X