2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞர் மத்திய நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்;பட்ட 13 கிராமங்களிலும்; இளைஞர் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல்  நேற்று புதன்கிழமை (30) நாட்டப்பட்டன.

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடன்   மேற்படி மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தலா இளைஞர்  மத்திய நிலையம் 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

மாந்தை மேற்கில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பி.பூலோகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X